ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்து பேசியது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் பார்த்திபன்
பார்த்திபன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தொடங்கப்பட்ட படம் 'ஏலேலோ'. பாடல் பணிகள் எல்லாம் முடிவடைந்தும், பல்வேறு காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டு, தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் பார்த்திபன்.
இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கத்துக்கு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் பார்த்திபன். பிப்ரவரி முதல் வாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் நடத்தவுள்ள 'இளையராஜா 75' இசை நிகழ்ச்சியின் பணிகளில் துரிதமாக செயல்பட்டு வருகிறார் பார்த்திபன்.
இளையராஜா இசை நிகழ்ச்சிக்காக பல்வேறு பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார் பார்த்திபன். இதற்காக ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த போது 'ஏலேலோ' படம் குறித்து விசாரித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் கூறியிருப்பதாவது:
19 வருடங்களுக்கு முன் துவங்கிய'ஏலேலோ'படத்தின் கதையையும் காட்சிகளையும் எனக்கே ஞாபகப்படுத்தி பெருமைப்படுத்தி அந்தப் படம் ஒரு Musical treat விரைவில் செய்வோம், நீங்க தான் வர வர Brisk ஆயிகிட்டு வர்றீங்களே அப்புறமென்ன?"10,000 Watts possitive energy-ஐ charge செய்தனுப்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.