தமிழ் சினிமா

பொன் ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி

செய்திப்பிரிவு

'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தை பொன்ராம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' என சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பொன் ராம். மூன்றாவதாக இணைந்த 'சீமராஜா' திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து தனது படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் பொன் ராம். அப்படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதி அவரை அணுகியுள்ளார்.

அவருக்குக் கதை பிடித்துவிடவே, இருவரும் இணைந்து படம் பண்ணுவது உறுதியாகியுள்ளது. தயாரிப்பாளர் யார், எப்போது படப்பிடிப்பு என்பது விரைவில் தெரியவரும்.

விஜய் சேதுபதி நடிப்பில் 'அருண்குமார் இயக்கியுள்ள படம்', 'சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்கள் தயாராகவுள்ளன. இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமனிதன்' படத்தில் நடித்து வருகிறார்  விஜய் சேதுபதி.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT