தமிழ் சினிமா

கமல் பிறந்தநாளில் உத்தம வில்லன் ரிலீஸ்!

ஸ்கிரீனன்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'உத்தம வில்லன்' திரைப்படம், அவரது பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், கமலின் நீண்ட நாள் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் படம் 'உத்தம வில்லன்'. நாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜா குமார், இவர்களோடு முதன்முறையாக இயக்குநர் பாலச்சந்தரும், இயக்குநர் கே.விஸ்வநாத்தும் இணைந்து நடிக்கின்றனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை விரைவில் வெளியிடப்படவுள்ளது. தற்போது இந்தத் திரைப்படம் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது கமலின் 60-வது பிறந்தநாள் என்பதால், திரைப்பட வெளியீட்டோடு, பிறந்தநாள் விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த கமல் நற்பணி மன்றம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த பின்னரே 'உத்தம வில்லன்' ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT