தமிழ் சினிமா

சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?

செய்திப்பிரிவு

சந்திரபாபு வேடத்தில் நடிக்க பிரபுதேவாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான படம் ‘சார்லி சாப்ளின் 2’. ஷக்தி சிதம்பரம் இயக்கிய இந்தப் படத்தில், நிக்கி கல்ரானி மற்றும் அதா சர்மா என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர். அம்ரிஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

‘யங் மங் சங்’, ‘தேள்’, ‘பொன் மாணிக்கவேல்’ ஆகிய படங்கள் தற்போது பிரபுதேவா கைவசம் உள்ளன. மேலும், மோகன்லால் உள்பட நிறைய நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகிவரும் ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது சல்மான் கானை வைத்து ‘தபாங் 3’ என்ற இந்திப் படத்தையும் இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் பிரபுதேவா. ஹீரோயினாக சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சந்திரபாபு வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில், சந்திரபாபு வேடத்தில் நடிக்க பிரபுதேவாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT