தமிழ் சினிமா

நான்கு ஹீரோயின்கள் நடிக்கும் ‘கன்னித்தீவு’

செய்திப்பிரிவு

நான்கு ஹீரோயின்கள் இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘கன்னித்தீவு’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கர்ஜனை’. நவ்தீப் சிங்கின் ‘என்.எச். 10’ இந்திப் படத்தை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. சுந்தர் பாலு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.

ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில் த்ரிஷா நடிக்கிறார். வம்சி கிருஷ்ணா, அமித் பார்கவ், ஸ்ரீரஞ்சனி, வடிவுக்கரசி, சுவாமிநாதன், மதுமிதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘கன்னித்தீவு’ என்ற படத்தை இயக்குகிறார் சுந்தர் பாலு. இன்று பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தை, கிருத்திகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்ய, அரோல் கரோலி இசையமைக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா என நான்கு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

SCROLL FOR NEXT