தமிழ் சினிமா

லாஸ் ஏஞ்சல்ஸில் ‘தளபதி 63’ படக்குழு

செய்திப்பிரிவு

‘தளபதி 63’ படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார்.

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு நடிப்பது மட்டுமே இப்போதைக்கு முடிவாகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, ஜனவரி இறுதியில் தொடங்கும் எனத் தெரிகிறது..

கதைப்படி ட்ரெய்னராக நடிப்பதால், இன்னும் ஃபிட்டாக விஜய் இருக்க வேண்டும் என அட்லீ முடிவு செய்திருக்கிறார். இதற்காக, ஸ்பெஷல் ட்ரெய்னர் ஒருவரை வைத்து விஜய்யின் உடலமைப்பை மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், லொகேஷன் பார்ப்பதற்காக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றிருக்கிறது படக்குழு. அட்லீ, ஒளிப்பதிவாளர் விஷ்ணு, கிரியேட்டிவ் புரொடியூஸர் அர்ச்சனா கல்பாத்தியுடன், அட்லீயின் மனைவி பிரியாவும் சென்றுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் தாங்கள் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அர்ச்சனா கல்பாத்தி, ‘கோலிவுட் டு ஹாலிவுட்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த வருடம் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT