‘இவரை நான் என் வாழ்க்கையில் பெற்றது என்னுடைய அதிர்ஷ்டம்’ என நடிகை மடோனா செபாஸ்டியன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். நடிக்க வருவதற்கு முன்பாகவே சில ஆல்பங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
தமிழில் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, ‘பவர் பாண்டி’, ‘ஜுங்கா’ உள்ளிட்ட படங்களிலும் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகிவரும் 'கொம்பு வெச்ச சிங்கம்டா' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மடோனா செபாஸ்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் நண்பருடன் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றியுள்ளார். அதில், “சிலருடன் இருக்கும்போதுதான் நாம் நாமாக இருக்க முடியும். அதுவே உண்மையான சுதந்திரம். அப்படிப்பட்ட இவரை நான் என் வாழ்க்கையில் பெற்றது என்னுடைய அதிர்ஷ்டம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மடோனாவுடன் இருக்கும் அந்த நபர் இசையமைப்பாளர் என்றும், அவர் மடோனாவின் நெருங்கிய நண்பர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.