தமிழ் சினிமா

படப்பிடிப்பு தள படங்கள் லீக்: என்.ஜி.கே படக்குழு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

'என்.ஜி.கே' படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கு படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பரீத், சிங், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'என்.ஜி.கே'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, 'என்.ஜி.கே' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.

இதை சூர்யா ரசிகர்கள் வைரலாகப் பரப்பினர். இதனைத் தொடர்ந்து 'என்.ஜி.கே' தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ''ரசிகர்கள் எல்லாரும் சூர்யா அண்ணா மற்றும் 'என்ஜிகே' குறித்து தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பது எங்கள் எல்லாருக்கும் புரிகிறது. உங்களிடம் அளிக்கதான் எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருக்கிறோம். படத்தின் வெளியீடு வரை உங்கள் ஆர்வத்தைக் கட்டுப்படுத்துங்கள். தயவுசெய்து எதையும் லீக் செய்யாதீர்கள்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனவரி முதல் மாதத்துக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, கோடை விடுமுறைக்கு 'என்.ஜி.கே' படத்தை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT