தமிழ் சினிமா

நான் செய்யாத தவறுக்குப் பாதிக்கப்பட்டேன்: விஷால் வேதனை

ஸ்கிரீனன்

நீதித்துறையின் மிது நம்பிக்கையிருக்கிறது என விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் எதிரணியைச் சேர்ந்தவர்கள், இந்த நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்று கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு சங்க அலுவலகத்தைப்  பூட்டினார்கள்.

விஷால் இன்று காலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போடப்பட்ட பூட்டை உடைத்து, உள்ளே செல்ல முற்பட்டார். அப்போது அவருக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார்.

விஷால் விடுவிக்கப்பட்ட பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

''சட்ட விரோதமான 8 மணி நேர காவலுக்குப் பிறகு, வெளியே வந்துவிட்டேன். நான் செய்யாத தவறுக்குப் பாதிக்கப்பட்டேன்.  எங்கள் சொந்த அலுவலகத்திற்குள் நுழைய விடவில்லை என்பது வருத்தமளிக்கிறது. சட்டவிரோதமாக கதவுகளைப் பூட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. நிச்சயம் இது நியாயமற்றது.

நீதித்துறையின் மிது நம்பிக்கை இருக்கிறது. இன்று நடந்ததற்கு எனக்கு நீதி கிடைக்குமென நம்புகிறேன். நலிவுற்ற தயாரிப்பாளர்களின் நலனுக்காக வேலை செய்வேன்; பொறுப்பேற்றபின் நான் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவேன்''.

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT