தமிழ் சினிமா

கனா படக்குழுவினரைப் பாராட்டிய சிம்பு: இயக்குநர் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

'கனா' பார்த்துவிட்டு தொலைபேசி வாயிலாக சிம்பு பாராட்டு தெரிவித்ததால், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கனா'. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி வருகிறார்கள்.

மேலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ட்விட்டர் தளத்திலிருந்து சிம்பு விலகியிருப்பதால், 'கனா' பார்த்துவிட்டு இயக்குநர் அருண்ராஜா காமராஜை தொலைபேசி வாயிலாக பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

உங்கள் வாழ்த்துக்கு மிகப்பெரிய நன்றி எஸ்டிஆர் சார். ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் நீங்கள் விலாவரியாக நீங்கள் சொன்ன பின்னூட்டமும் உங்கள் நேர்மறை சிந்தனையும் ஆழமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை நன்றி கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT