2017-ம் ஆண்டு வெளியான 'மெர்சல்' படத்தின் பாடல்கள் தொடர்ச்சியாக யூ டியூப் தளத்தில் சாதனை புரிந்து வருகிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மெர்சல்'. அக்டோபர் 18, 2017-ல் வெளியான இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இப்படம் வசூல் ரீதியாக பெரும் சாதனை புரிந்தது. டிஜிட்டல் இந்தியா சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி ஓராண்டைக் கடந்தாலும், தொடர்ச்சியாக 'மெர்சல்' பாடல்கள் யூ டியூப் தளத்தில் சாதனை புரிந்து வருகிறது.
இப்படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடல் இப்போதுவரை ரசிக்கப்பட்டு வருவது நினைவுக்கூரத்தக்கது. மேலும், 'மெர்சல்' இசையுரிமையை வைத்திருக்கும் சோனி நிறுவனம் “'மெர்சல்' பாடல்கள் அனைத்துமே ஒன்றிணைந்து 30 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது” என்று அறிவித்துள்ளது.
சமீபகாலத்தில் யூ டியூப் தளத்தில் ஒரு படத்தின் பாடல்கள் இவ்வளவு பெரிய இமலாய சாதனையை நிகழ்த்தியதில்லை. இதனால், விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.