தமிழ் சினிமா

டிச.28-ம் தேதி வெளியாகிறது பேட்ட ட்ரெய்லர்

செய்திப்பிரிவு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'பேட்ட' படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழுமையாக முடிவுற்று, தணிக்கை அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், ட்ரெய்லர் எப்போது என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில், டிசம்பர் 28-ம் தேதி 'பேட்ட' ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'பேட்ட' படத்தின் கதை ஆணவக் கொலைகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. ரஜினியுடன் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரங்கள் அனைத்துமே ட்ரெய்லர் தெரியவரும். 
'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, நவாசுதின் சித்திக், விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் முக்கியமான தமிழக விநியோக ஏரியாக்களின் உரிமையை வாங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

SCROLL FOR NEXT