தமிழ் சினிமா

பிப்ரவரியில் வெளியாகும் வர்மா: தமிழக விநியோக உரிமை விற்பனை

செய்திப்பிரிவு

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் 'வர்மா', பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளது படக்குழு.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இப்படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் வெளியீடாகத் திரைக்கு வரும் என்று அறிவித்தது படக்குழு. தற்போது, இப்படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள சக்திவேலன், ‘பிப்ரவரியில் வெளியாகும்’ என்று அறிவித்துள்ளார்.

'வர்மா' படத்தில் மேகா என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். ஏற்கெனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்திருக்கும் மேகா, ‘வர்மா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT