மன்சூரலிகான் எழுதி, இயக்கியுள்ள படம் ‘கடமான் பாறை’. ராஜ்கென்னடி ஃபிலிம்ஸ் சார்பில் மன்சூரலிகானே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அத்துடன், மிக முக்கியமான வேடத்திலும் நடித்துள்ளார்.
மன்சூரலிகான் மகன் அலிகான் துக்ளக், இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனுராகவி மற்றும் ஜெனி பெர்னாண்டஸ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சிவசங்கர், பிளாக் பாண்டி, முல்லை, கோதண்டம், அமுதவாணன், கனல் கண்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். “என் படத்தில் என்ன கமர்ஷியல் இருக்க வேண்டுமோ, அது இருக்கிறது. அதனால், ‘ஏ’ சான்றிதழ் தான் கிடைக்கும் நினைத்தேன். அதன்படியே கிடைத்திருக்கிறது” என்கிறார் மன்சூரலிகான்.
ரவிவர்மா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், பாடல் ஒன்றையும் எழுதியுள்ளார் மன்சூரலிகான்.