தமிழ் சினிமா

தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்: ரஜினிகாந்துக்கு வாழ்த்துக் கூறிய சச்சின்

செய்திப்பிரிவு

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவரும், 40 ஆண்டுகளாக தனக்கென திரையுலகில் தனி இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று 68-வது பிறந்தநாளாகும்.

நடிகர் ரஜினி காந்த் தனது 68-வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் வேளையில் அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், திரையுலக நடிகர்கள், நடிகைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு வீரர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கிரிக்கெட்டின் ஜாம்பவான், லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி காந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் ஆண்டு உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் ரஜினிகாந்த் சார்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT