தமிழ் சினிமா

பிரபாஸின் சாஹோ வெளியீடு தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

'பாகுபலி' என்ற பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சர்வதேச அளவில் ரசிகர்களைப் பெற்றிருக்கும் பிரபாஸ் நடிப்பில், அடுத்து 'சாஹோ' படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, வெண்ணிலா கிஷோர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். மதி ஒளிப்பதிவை கவனிக்க, ஷங்கர் - எஹ்ஸான் - லாய் கூட்டணி இசையமைக்கிறது. மிகப்பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் 'சாஹோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கியது. 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில், ஹைதராபாத், மும்பை, அபுதாபி, துபாய், ரொமேனியா உள்ளிட்ட பல இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படத்தின் பட்ஜெட்டில் ஒரு முக்கியப் பங்கு சண்டைக் காட்சிகளுக்காகவே செலவிடப்படுகிறது. இதில் ஒரு பகுதியாக கார் துரத்தல் காட்சி ஒன்று துபாய் பூர்ஜ் கலிஃபா கட்டிடம் அருகே படமாக்கப்பட்டுள்ளது. ரஷ் ஹவர், ஆர்மகெட்டன், மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் சண்டைக் காட்சிகள் இயக்கிய கென்னி பேட்ஸ் என்பவர், 'சாஹோ' படத்தின் சண்டைக் காட்சிகளின் மேற்பார்வையைக் கவனிக்கிறார்.

தண்ணீருக்கடியில் சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளதால், இந்தப் படத்துக்காக ஸ்கூபா டைவிங் பயிற்சியை மேற்கொண்டுள்ளார் பிரபாஸ். 

SCROLL FOR NEXT