ரஜினி நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் இணைந்து நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று (டிசம்பர் 9) சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், “தலைவர் முன்னாடி கண்ணாடி போடக்கூடாது. இந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள். நான் முதன்முதலாக தியேட்டரில் பார்த்த படம் ‘அண்ணாமலை’. அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் என நினைக்கிறேன். அப்போது முதல் இன்றுவரை அந்த ‘முதல் நாள் முதல் காட்சி’யை மிஸ் பண்ணாமல் பார்த்துக்கிட்டு இருக்கேன். என்னைத் தலைவர் ரசிகன் என்பதைவிட, மிகப்பெரிய வெறியன் என்று சொல்லலாம்.
இந்தப் படத்தில் கார்த்திக் சுப்பராஜுடன் பணியாற்றியது செமையா இருந்தது. நான் தலைவரின் வெறியன் என்றால், அவர் மகா வெறியன். வெறியனும், மகா வெறியனும் சேரும்போது கண்டிப்பா ஒரு வெறி வரும்ல... அதுதான் இந்த ‘பேட்ட’. கனவை நனவாக்கியதற்கு நன்றி கார்த்திக்.
சில நாட்களுக்கு முன்பு ‘பேட்ட பராக்’ பாடலின் ஃபைனல் மிக்ஸிங் போய்க் கொண்டிருந்தது. அப்போது அந்தப் பாடலைக் கேட்டவர், ‘எக்ஸலண்ட்... எக்ஸலண்ட்...’ என்று பாராட்டினார். அதைக் கேட்டபிறகு, அடுத்த நான்கு மணி நேரம் நான் இதுவரை அப்படி ஒர்க் பண்ணதே கிடையாது, அவ்வளவு எனர்ஜி எனக்கு.
இந்தப் படத்துல மொத்தம் 6 பாடல்கள், 5 தீம் இருக்கு. மொத்த ஆல்பத்தையும் தலைவரோட ரசிகர்களுக்கு டெடிகேட் பண்றேன். அவரை எப்படியெல்லாம் நாம ரசிச்சிருப்போமோ, என்ஜாய் பண்ணியிருப்போமோ, அவரை எப்படியெல்லாம் கொண்டாடியிருப்போமோ... அதை எல்லாம் ரீ கலெக்ட் பண்ண இந்த ஆல்பத்தில் முயற்சித்திருக்கேன். டைட்டில் கார்டுல தலைவரோட பேர் வரும்போது, ‘அண்ணாமலை’ படத்துல வர்ற அதே இசையை வைக்கணும்னுதான் என்னோட எண்ணம்.
இந்தப் படத்துக்காக உழைத்த 6 மாதங்கள், அடுத்து வரப்போற ஒரு மாதம் எல்லாமே கனவு மாதிரிதான் இருக்கு. அவர் நடித்த காட்சிகளை சிஸ்டமில் பார்க்கும்போது கிடைக்கிற சந்தோஷம், வேற யாருக்கும் கிடைக்காது. இந்தப் படம், நிச்சயமா அவர் ரசிகர்களுக்கான படம் தான். அவங்க என்னவெல்லாம் ரசிப்பாங்களோ, அது எல்லாமே படத்துல இருக்கு. ஏற்கெனவே வெளியான பாடல்கள்தான் இந்தப் படத்துக்கான ஒட்டுமொத்த மூட் (mood)”என்றார்.