தமிழ் சினிமா

பேட்ட புது போஸ்டர் வெளியீடு: சிங்கார் சிங் நவாசுதீன் சித்திகி

செய்திப்பிரிவு

'பேட்ட' படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திகியின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது. 

'2.0' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'. இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. பொங்கல் வெளியீடு என்பதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

smalljpgright

சில நாட்களுக்கு முன் வெளியான பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், டிசம்பர் 5 மாலை நவாசுதின் சித்திகி கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் போஸ்டரை பேட்ட தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

நவாசுதின், கண்ணாடி போட்டுக் கொண்டு மெலிதாக சிரிப்பது போல இருக்கும் இந்த போஸ்டரில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் சிங்கார் சிங் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

SCROLL FOR NEXT