இந்திய நடிகர்களிலேயே உயரமான கட் அவுட், கேரளாவில் கொல்லம் பகுதியில் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஏராளமான ரசிகர் மன்றங்கள் விஜய்க்கு உள்ளன. இந்த ரசிகர் மன்றங்கள் மூலம், விஜய் படம் வெளிவரும்போதெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், கட் அவுட்களில் புதுவிதமான அணுகுமுறைகளைச் செய்தல் ஆகியவற்றின் மூலம் விஜய் மீதான தங்கள் அன்பினை மலையாள ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அங்குள்ள விஜய் ரசிகர் மன்றங்களில் பிரபலமானது கொல்லம் நண்பன்ஸ் (kollam nanbans) ரசிகர் மன்ற அமைப்பு.
இவர்கள் தீபாவளி அன்று ( நவம்பர் 6 ஆம் தேதி) திரைக்கு வரவுள்ள 'சர்கார்' படத்துக்கு இந்திய நடிகர்களிலேயே மிகப் பெரிய கட் அவுட்டை விஜய்க்காக வெள்ளிக்கிழமை மாலை கொல்ல பகுதியில் திறந்தனர். இந்த கட் அவுட் உயரம் சுமார் 175 அடி உயரம் ஆகும். இந்த திறப்பு விழாவை அங்குள்ல விஜய் ரசிகர்கள் திருவிழாவை போல் கொண்டாடினர்.
இதோ அவற்றின் வீடியோ