மாதச் சம்பளம் பெறும் எம்.எல்.ஏக்களும் எம்.பி.க்களும் சேர்ந்து எப்படி எக்கச்சக்கமாக செலவாகும் ஒரு செய்தி சேனலை ஆரம்பிக்க முடிகிறது என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுங்கட்சி ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படும் நியூஸ் ஜெ சேனலின் ஒளிபரப்பு இன்று தொடங்கியது. ஜெயா டிவி, டிடிவி தினகரன் ஆதரவாக மாறியதாலும், அடுத்த வருடம் வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்துமே இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து நடிகர் விஷால் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இன்னொரு செய்தி சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அற்புதம். ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க எக்கச்சக்கமாக செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மாதச் சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் ஆகிய நீங்கள் எப்படி இது போன்ற ஒரு வியாபார அமைப்பை ஆரம்பிக்க முடிகிறது? 2019-க்காக காத்திருக்கிறேன்” என்று யார் பெயரையும், சேனல் பெயரையும் குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட், நியூஸ் ஜெ தொலைக்காட்சியைக் குறிப்பதாக நெட்டிசன்கள் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.