தமிழ் சினிமா

2.0 படத்துக்காக தங்கள் வாழ்வின் ஒரு பகுதியை செலவிட்டோம்: இயக்குநர் ஷங்கர் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

2.0 படத்தை ரசித்து ஊக்குவித்த ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் '2.0'. இந்திய திரையுலகில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

3 வருடத் தயாரிப்பு, கிராபிக்ஸில் தாமதம் என்று பல சோதனைகளைத் தாண்டி நவம்பர் 29-ம் தேதி வெளியானது. பலரும் கிராபிக்ஸ் பிரம்மாண்டம் என்று பாராட்டி புகழ்ந்து வருகிறார்கள். நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ஷங்கர் தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார்.

ஷங்கர் தனது ட்விட்டரில், "2.0 படத்தை ரசித்து ஊக்குவித்து கொண்டாடி அதை மிகப்பெரிய ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. படத்தை ஆதரித்த ஊடகங்களுக்கும் எங்கள் குழுவின் கடின உழைப்பை மதித்தவர்களுக்கும் நன்றி. 2.0 படத்துக்காக தங்கள் வாழ்வின் ஒரு பகுதியை செலவிட்ட எனது ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT