தமிழ் சினிமா

2.0 அக்‌ஷய் குமார் கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் யார்?

கார்த்திக் கிருஷ்ணா

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் '2.0' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலில் பல சாதனைகள் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்‌ஷய் குமார், படத்தில் பறவையியல் ஆராய்ச்சியாளராக சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்கு நிஜ வாழ்வில் ஒரு இன்ஸ்பிரேஷன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் புகழ்பெற்ற பறவையியல் ஆய்வாளரான சலீம் அலியின் தாக்கத்திலேயே அக்‌ஷய் குமாரின் பக்‌ஷிராஜன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சலீம் அலியின் தோற்றத்தை ஒட்டியே அக்‌ஷய் குமாரின் பக்‌ஷிராஜன் தோற்றமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சலீம் அலி இந்தியாவின் பேர்ட்மேன் என்று அறியப்பட்டவர். இந்தியாவில் பறவையியல் ஆய்வையும் பிரபலமாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பறவைகளின் முக்கியத்துவம், மொபைல் ஃபோன்கள் மற்றும் மொபைல் ஃபோன் டவர்களால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்பு, இதனால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம், விவசாயத்தில் ஏற்படும் பாதிப்பு என பல சமூக கருத்துகளை ’2.0’ பேசுகிறது. சலீம் அலி போன்றே பக்‌ஷிராஜனும் பறவைகளுக்காக கவலைப்பட்டு, கண்ணீர் விடுபவர். 

SCROLL FOR NEXT