தமிழ் சினிமா

‘காஞ்சனா 3’ படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டம்

செய்திப்பிரிவு

ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘காஞ்சனா 3’ (முனி 4). ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துவரும் இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் வேதிகா மற்றும் ஓவியா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் இதன் படப்பிடிப்பு நடைபெற்று, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. அஜித்தின் கடந்த 4 படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த வெற்றி, இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை என்பதால், குழந்தைகளைக் குறிவைத்து படம் வெளியிடப்பட இருக்கிறது. ‘காஞ்சனா 2’ படமும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசைக்காக மதன் கார்க்கியின் ‘டூபாடூ’ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார் லாரன்ஸ்.

SCROLL FOR NEXT