தமிழ் சினிமா

நஸ்ரியா - பகத் பாசில் திருமணம்: திருவனந்தபுரத்தில் நாளை நடக்கிறது

செய்திப்பிரிவு

நடிகை நஸ்ரியா பகத் பாசில் திருமணம் ஆகஸ்ட் 21-ம் தேதி திருவனந்தபுரத்தில் இஸ்லாம் முறைப்படி நடைபெறுகிறது.

நடிகை நஸ்ரியா தமிழில் ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ படங்களில் நடித்தவர். இயக்குநர் பாசில் மகனும் மலையாள நடிகருமான பகத் பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

பகத் மலையாளத்தில் கேரளா கஃபே, காக்டெயில், ரெட் ஒயின் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி ஆகஸ்டு 24-ம் தேதி ஆலப்புழாவில் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT