எந்த ஒரு புதுப்படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
'வேலையில்லா பட்டதாரி' படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'அனேகன்', வெற்றிமாறன் இயக்கும் படம், பாலாஜி மோகன் இயக்கவிருக்கும் படம், பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.
இப்படங்களைத் தொடர்ந்து 'எதிர் நீச்சல்' இயக்குநர் செந்தில்குமார் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மறுத்திருக்கிறார் தனுஷ்.
இது குறித்து, "இப்போதைக்கு நான் எந்த ஒரு புதுப்படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. ஏதாவது ஒரு புதுப்படத்தை ஒப்புக் கொண்டால் அதை தெரிந்து கொள்ளும் முதல் நபராக நீங்கள்தான் இருப்பீர்கள்" என்று கூறியுள்ளார் தனுஷ்.
'எதிர் நீச்சல்' மூலமாக செந்தில்குமாரை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் தனுஷ். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் செந்தில்குமார் இயக்கி வரும் 'காக்கி சட்டை' படத்தை தனுஷ் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.