திரைப்படத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண் களுக்கு பாலியல் தொந்தரவு உள்ளது. பாலியல் தொந்தரவு குறித்து பெண்கள் காலம் கடத்தாமல் உடனே புகார் தெரிவிக்க வேண்டும் என நடிகை ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார்.
ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து சேலத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகை ஜனனி ஐயர் மற்றும் நடிகர் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் நடிகை ஜனனி ஐயர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாலியல் தொல்லை குறித்து அண்மையில் நிறைய பெண்கள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இது ஆரோக்கிய மானது. திரைப்படத் துறையில் மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன. திரைப் படத்துறை என்பதால் அது பெரிதாக பேசப்படுகிறது.
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் காலம் கடத்தாமல் உடனே புகார் தெரிவிக்க வேண்டும். வெளியே சொன்னால்தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும், தவறு செய்பவர் களுக்கும் பயம் ஏற்படும். பெண்கள் மீ டூ விவகாரத்தை தவறாக பயன் படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் பாலாஜி கூறும் போது, “மீ டூ விவகாரத்தில் குற்றம்சாட்டும் பெண்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொள் கிறார்களா? அல்லது மற்றவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், இது கேவலமான விஷயம். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. குற்றம் சொல்பவர்கள் அவரை மட்டுமின்றி அவர்களின் குடும்பத் தினரையும் அசிங்கப் படுத்திக் கொள்கின்றனர். ஆண்களுக்கும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு நிறைய தொந்தரவுகள் உள்ளன. ஆண்கள் சங்கம் அமைக்க எனது முழு ஆதரவு உண்டு” என்றார்.