தமிழ் சினிமா

நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர் கருணாநிதி: அஜித் புகழாஞ்சலி

ஸ்கிரீனன்

நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர் கருணாநிதி என்று அஜித் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

கருணாநிதியின் மறைவு குறித்து அஜித் விடுத்துள்ள அறிக்கையில், “முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், என் சக தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT