’சண்டக்கோழி 2’ படப்பிடிப்பில் வரலட்சுமி குறித்து விஷால் ட்வீட் செய்திருப்பதை அவருடைய நண்பர்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள்.
’சண்டக்கோழி 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு காரைக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஷால், வரலட்சுமி உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் காட்சிப்படுத்தி வந்தார் இயக்குநர் லிங்குசாமி.
வரலட்சுமி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “’சண்டக்கோழி 2’ படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு. வரலட்சுமி சரத்குமார் படப்பிடிப்பில் தனது பங்கை முடித்துவிட்டார். அந்தக் காட்சிகள் நன்றாக இருக்கும்.
க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியும் அட்டகாசம். மிக்க நன்றி டார்லிங் வரு. நான் பார்த்ததிலேயே மிகவும் கண்ணியமான தொழில்முறையான நடிகை. அக்டோபர் 18-ஐ எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
விஷாலின் ட்வீட்டிற்கு அவரது நண்பர்களான ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் ‘இது யாருடைய ட்வீட்... வரலட்சுமி சொல்லி விஷால் ட்வீட் செய்திருக்கிறார்’ என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.
’சண்டக்கோழி 2’ படத்தில் விஷாலுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமியும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.