தமிழ் சினிமா

அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்வதே கலைஞருக்கு கொடுக்கும் மரியாதை: ரஜினி வேண்டுகோள்

ஸ்கிரீனன்

அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்வதே கலைஞருக்கு கொடுக்கும் மரியாதை என்று தமிழக அரசுக்கு  ரஜினி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. மெரினாவில் இடம் ஒதுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதிப்பிற்குரிய அமரர் கலைஞருக்கு அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை” என்று ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT