தமிழ் சினிமா

ஹன்சிகா நடிப்பில் 50-வது படமாக உருவாகும் ‘மஹா’

ஸ்கிரீனன்

ஹன்சிகா நடிப்பில் உருவாகும் 50-வது படத்துக்கு ‘மஹா’ என்று பெயரிட்டு இருக்கிறது படக்குழு.

’ஹவா’ என்ற இந்திப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா மோத்வானி.  தமிழில் தனுஷ் ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமான ஹன்சிகா, பலருடனும் ஜோடியாக நடித்துவிட்டார். தெலுங்கு மற்றும் தமிழில் அதிகமான படங்களில் நடித்திருப்பவர், ஒரு கன்னடம் மற்றும் ஒரே ஒரு மலையாளப் படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து மொழிகளிலும் சேர்த்து 49 படங்களை எட்டியிருந்தார். தற்போது தனது 50-வது படத்தை முடிவு செய்திருக்கிறார் ஹன்சிகா. இதற்கு ‘மஹா’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். இத்தலைப்பை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

’மஹா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜமீல். எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். செப்டம்பர் மாதம் தொடங்கும் இந்தப் படம், அடுத்த வருடம் ரிலீஸாக இருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT