கலைஞரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஜீ.வி.பிரகாஷ் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
கருணாநிதியின் மறைவு குறித்து ஜீ.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கற்பனையில் மட்டுமே சாத்தியப்பட்டதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்டிய அரசியல் பெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று தெரிவித்திருக்கிறார்.