தமிழ் சினிமா

உடன் இருப்போரை இயக்குநராக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

ஸ்கிரீனன்

தன்னிடம் இணை இயக்குநராக பணியாற்றி வரும் ராஜ்குமார் இயக்கவிருக்கும் 'ரங்கூன்' என்னும் படத்தை தயாரிக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

தன்னிடம் பணியாற்றிய உதவி இயக்குநர்களை, இயக்குநராக்க தன்னால் முடிந்தளவிற்கு உதவிகள் செய்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் .

'எங்கேயும் எப்போதும்', 'வத்திக்குச்சி', 'மான் கராத்தே' ஆகிய படங்களைத் தயாரித்து, தன்னுடன் இருந்த உதவி இயக்குநர்களை இயக்குநராக்கினார். தற்போது அந்த இயக்குநர்கள் வரிசையில் இணைந்து இருக்கிறார் ராஜ்குமார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி', 'ஏழாம் அறிவு' மற்றும் படப்பிடிப்பில் இருக்கும் 'கத்தி' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ராஜ்குமார். இவர் 'ரங்கூன்' என்னும் படத்தை இயக்க இருக்கிறார்.

இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அனிருத்.

மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. 'கத்தி' வெளியீட்டிற்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பைத் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிக்கும் '10 எண்றதுக்குள்ள' படத்தை தயாரித்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT