லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்து வரும் ’காஞ்சனா 3’ படத்தை டிசம்பர் 21-ம் தேதி வெளியிடப் படக்குழு முடிவு செய்திருக்கிறது.
ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் 'காஞ்சனா 3'. ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் லாரன்ஸே தயாரித்து வரும் இப்படத்தைச் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. முந்தைய பாகங்கள் அனைத்துமே பெரும் வெற்றி என்பதால் ‘காஞ்சனா 3’ படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. மேலும், படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது ‘காஞ்சனா 3’ திரைப்படம் டிசம்பர் 21-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
ஓவியா, வேதிகா உள்ளிட்ட சிலர் லாரன்ஸ் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வருகிறார்கள். இப்படத்தின் பாடல்களுக்காக மதன் கார்க்கியின் 'டூப்பாடூ ' இணையத்தோடு கைகோத்திருக்கிறார். பின்னணி இசையமைக்கப் போவது யார் என்பது விரைவில் தெரியவரும்