கருணாநிதி ஆற்றிய பங்கு எப்போதும் நினைவில் இருக்கும் என்று அனுஷ்கா புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
கருணாநிதியின் மறைவு குறித்து அனுஷ்கா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் எம் கருணாநிதியின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். கலை, இலக்கியம் மற்றும் இந்திய அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்கு எப்போதும் நினைவில் இருக்கும். அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு என் பிரார்த்தனைகள்” என்று தெரிவித்திருக்கிறார்.