தமிழ் சினிமா

‘ஜெயிலர் 2’-வில் இணைந்த இந்தி நடிகை

செய்திப்பிரிவு

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் இந்தி நடிகை அபேக்‌ஷா போர்வல் இணைந்துள்ளார். இந்தியில் 'உண்டேகி'(Undekhi), 'ஹனிமூன் போட்டோகிராஃபர்', 'ஸ்லேவ் மார்க்கெட்' ஆகிய வெப் தொடர்களில் மூலம் பிரபலமானவர் அவர். அபேக்‌ஷா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT