தமிழ் சினிமா

நாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்

செய்திப்பிரிவு

காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் ‘ராபின்ஹுட்’. 1980-களின் கிராமப் புற பின்னணியில், உருவாகியுள்ள இதை கார்த்திக் பழனியப்பன் இயக்கி அறிமுகமாகிறார்.

மறைந்த ஆர்என்ஆர் மனோகர், சதீஷ், அம்மு அபிராமி, சங்கிலி முருகன், முல்லை மற்றும் பலர் நடித்துள்ளனர். லூமியர்ஸ் நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரித்துள்ளனர். நாத் விஜய் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு இக்பால் அஸ்மி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கிராமத்தில் ஒரு லாட்டரி சீட்டில் பெரிய பரிசு விழ, அந்த பரிசுக்காக இருவருக்கு இடையே நிகழும் போட்டியும், பிரச்சினைகளும் தான் இப்படத்தின் கதை. நாம் மறந்து போன லாட்டரி சீட்டு காலத்தை, கிராமப் புற பின்னணியில் மீட்டெடுத்து கலகலப்பான திரைக் கதையுடன் கமர்ஷியல் என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இதன் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச்.வினோத் டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவை பாராட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT