தமிழ் சினிமா

நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை: ஆண்ட்ரியா

ஸ்டார்க்கர்

நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை தங்களது படங்களில் விரும்புவதில்லை என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

விகர்ணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்க்’. நவம்பர் 21-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் அனைத்து பணிகளுமே இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில் தான் நடைபெற்றுள்ளது.

இப்படத்துக்காக படக்குழுவினர் அனைவரும் இணைந்து பேட்டியொன்று அளித்துள்ளனர். அதில் ‘வடசென்னை’ படத்தின் சந்திரா கதாபாத்திரம் குறித்து பேசியிருக்கிறார் ஆண்ட்ரியா. அப்பேட்டியில், “’வடசென்னை’ படத்தின் சந்திரா கதாபாத்திரத்திற்குப் பிறகு எனக்கு எந்தவொரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

ஆனால் நிறைய பாராட்டுகள் கிடைத்தது, வேலை கிடைக்கவில்லை. இங்கு துரதிர்ஷ்டவசமாக நிறைய நடிகர்கள் தங்களது படங்களில் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை. இதை நான் தமிழ் சினிமாவில் கவனிப்பது மட்டுமன்றி, என் திரையுலக வாழ்விலும் கவனிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.

SCROLL FOR NEXT