தமிழ் சினிமா

பவீஷ் நடிப்பில் உருவாகும் ‘லவ் ஓ லவ்’

ஸ்டார்க்கர்

பவீஷின் நடிப்பில் உருவாகும் படத்துக்கு ‘லவ் ஓ லவ்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.

தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் படப்பூஜையில் தொடங்கியது. மகேஷ் ராஜேந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் பவீஷ் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்துக்கு ‘லவ் ஓ லவ்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். இதனை ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்தகட்ட படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயுத்தமாகி வருகிறது. ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்துக்குப் பிறகு பவீஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் இது. இதில் நாயகியாக நாக துர்கா நடித்து வருகிறார். இவர் தெலுங்கு யூ-டியூப் உலகில் பிரபலமானவர்.

’லவ் ஓ லவ்’ படத்தின் ஒளிப்பதிவாளராக பி.ஜி.முத்தையா, எடிட்டராக என்.பி.ஸ்ரீகாந்த், கலை இயக்குநராக மகேந்திரன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படம் குறித்து இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன், “’லவ் ஓ லவ்’ திரைப்படம் இன்றைய தலைமுறை, உறவுகளை எவ்வாறு பார்க்கிறது என்பதை உணர்ச்சியுடனும் பொழுதுபோக்காகவும் சித்தரிக்கும். காதலின் தருணங்களையும், விளையாட்டுத்தனத்தையும் இப்படம் பேசும்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பினை அடுத்தாண்டு ஜனவரிக்கும் முடித்து கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு.

Best of luck dear @Pavishvofficial

Here is#LoveOhLove : Title of @pavishvofficial's next #LOL - A breezy romantic entertainer @Zinema_media @CreativeEnt4‘s @dhananjayang @nagadurgaoffl @alyekmaliya @MuthaiahG @srikanth_nb @Harshika_Ramesh @Dstudiospostpic.twitter.com/AJNLdam3rI

SCROLL FOR NEXT