சித்தார்த் நடித்துள்ள படத்துக்கு ‘ரெளடி&கோ’ என்று பெயரிடட்டு டைட்டில் லுக் மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு.
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘டக்கர்’. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் சித்தார்த் நடித்து முடித்துள்ளார். அப்படத்துக்கு ‘ரெளடி&கோ’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.
அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்கள். இதில் சித்தார்த் உடன் நடித்துள்ள நடிகர்கள் குறித்து படக்குழு தெரிவிக்கவில்லை. இதற்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங், இசையமைப்பாளராக ரேவா, எடிட்டராக பிரதீப் இ.ராகவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுகிறது.
’டக்கர்’ படத்துக்கு முன்னதாகவே ‘சைத்தான் கே பட்சா’ என்ற படத்தில் சித்தார்த் – கார்த்திக் ஜி.க்ரிஷ் இணைந்து பணிபுரிந்துள்ளனர். அப்படம் நீண்ட வருடங்களாக வெளியாகாமல் உள்ளது. அப்படத்தினை தான் தலைப்பை மாற்றியிருக்கிறார்களா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.