சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'தளபதி கச்சேரி' லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருக்கும் நிலையில், நடிகர் விஜய் பாடியிருக்கிறார்.
‘ஜனநாயகன்’ விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், இந்தத் திரைப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. அதற்கு பின்னர் அவர், முழுநேர அரசியலில் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது. இதனிடையே, 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் முதல் பாடல் இன்று மாலை 6.03-க்கு வெளியானது. இப்பாடலில் இடம்பெற்றுள்ல வரிகள் அனைத்தும் விஜய்யின் அரசியல் வருகையை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.
அதோடு இப்பாடல் துள்ளலுடனும், ஒரு வைப் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும், விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்களின் பாடல்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் உள்ளது. மொத்தத்தில், இது விஜய் ரசிகர்களுக்கு ஒரு வைப் கொடுக்கும் பாடலாக அமைய வாய்ப்புள்ளது.