தமிழ் சினிமா

’ஆர்யன்’ அப்டேட்: 6 நிமிடங்கள் குறைப்பு

ஸ்டார்க்கர்

‘ஆர்யன்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் 6 நிமிடங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து, தயாரித்து வெளியாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அந்த விமர்சனங்களை முன்வைத்து, படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் 6 நிமிடங்களை குறைத்திருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இந்தக் காட்சிகளைக் குறைத்த பதிப்பு திங்கட்கிழமை முதல் திரையரங்குகளில் மாற்றப்படும் எனவும் கூறியிருக்கிறார்.

செல்வ ராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், கருணாகரன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷால் உடன் நடித்துள்ள படம் ‘ஆர்யன்’. ஜிப்ரான் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள இப்படத்தின் தெலுங்கு பதிப்பு நவம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் விற்கப்பட்டுவிட்டது. இதனால் விஷ்ணு விஷாலுக்கு லாபகரமான படமாகவே ‘ஆர்யன்’ இருக்கும் என தெரிகிறது.

‘ஆர்யன்’ படத்தினைத் தொடர்ந்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால். அதனை முடித்துவிட்டு அருண்ராஜ் காமராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT