தமிழ் சினிமா

‘பைசன்’ படத்தில் நிகழ்ந்த அற்புதம் - சிம்புவின் பாராட்டு குறித்து நெகிழும் மாரி செல்வராஜ்!

செய்திப்பிரிவு

சென்னை: ‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு சிம்பு பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், “சிம்பு சார் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவர் சொன்ன விஷயம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் தொடர்ந்து வேலை செய்ய வேலை செய்ய நம்மை அறியாமலேயே அற்புதத்தை நிகழ்த்தக்கூடிய ஒரு ஆளாக நாம் மாறிவிடுவோம். நாம என்ன செய்தாலும் அது அற்புதத்தை நோக்கி நகர தொடங்கும். அப்படி ஒரு அற்புதம் பைசன் படத்தில் நிகழ்ந்து இருப்பதாக தான் நம்புவதாக சொன்னார்” என்று மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

முன்னதாக ‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பலரும் மாரி செல்வராஜை பாராட்டி இருந்தனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பைசன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், உலகளவில் ரூ.60 கோடி வசூலை கடந்திருக்கிறது.

SCROLL FOR NEXT