‘பைசன்’ பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
’பைசன்’ படம் பார்த்துவிட்டு, இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ். அதில், “வணக்கம் மாரி. இப்போது தான் படம் பார்த்தேன். ரொம்ப பிடித்திருந்தது. நீங்கள் தான் பைசன். உங்களது வேலையைப் பார்த்து பெருமைப்படுகிறேன். தொடருங்கள். இந்தக் குரல் ரொம்பவே முக்கியம்- இயக்குநர் மணிரத்னம்.
’பரியேறும் பெருமாள்’ படத்திலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வாத்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பைசன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், உலகளவில் ரூ.60 கோடி வசூலை கடந்திருக்கிறது. இப்படத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Hi Mari,
Just saw the film. Liked it a lot. You are the Bison. Proud of your work. Keep it going. This voice is important.
- Director Mani Ratnam
பரியேறும்பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும்… pic.twitter.com/JlHXUaLD3Q