தமிழ் சினிமா

‘டியூட்’ படம் பேசுவது என்ன? - இயக்குநர் விளக்கம்

செய்திப்பிரிவு

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ஹிருது ஹாருண், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ள ‘டியூட்’ படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார்.

மைத்ரி மூவி மேக் கர்ஸ் தயாரித்த இப்படம் அக்.17-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இருவரை ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடந்தது.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூறும்போது, “பிரதீப் ரங்கநாதன், மூன்று படம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருக் கிறார். அவர் தொட்டதெல்லாம் வெற்றி. படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். சில கருத்துகளை, தைரியமாகப் பேசுவதற்கு பிரதீப் உறுதுணையாக இருந்தார். கிளைமாக்ஸில் வரும் ஆணவக்கொலை தொடர்பான வசனத்தை, கவின் ஆணவக்கொலை ஏற்படுத்திய பாதிப்பால்தான் வைத்தோம்.

தனக்கான வாழ்க்கைத்துணை யைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, ஒரு பெண்ணுக்கு மட்டும்தான் உள்ளது. வேறு யாருக்கும் இல்லை என்பதைத்தான் ‘டியூட்' பேசுகிறது. அனைத்துவிதமான வன்மங்களுக்கும் எதிரான படம் இது. எனக்கான நல்ல அறிமுகத்தை இந்தப் படம் மூலம் கொடுத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி” என்றார். படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT