தமிழ் சினிமா

தமிழ், தெலுங்கில் ரிலீஸாகும் ‘திரவுபதி2’!

செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்​கில் ரிலீ​ஸாகும் ‘திர​வுபதி 2’ ரிச்​சர்ட் ரிஷி, ரக்‌ஷனா இந்துசுதன், நட்டி நடராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், சரவண சுப்பையா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘திரவுபதி 2’.

ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்தப்படத்துக்கு பிலிப் ஆர் சுந்தர், ஒளிப்பதிவு செய்துள்ளார். நேதாஜி புரொடக்‌ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்துள்ளனர். மோகன் ஜி இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது. இந்தக் கதை தென்னிந்திய வரலாற்று சூழலில் சக்தி, மரபு மற்றும் நீதி பற்றி பேசுகிறது.

இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இரண்டாவது தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT