தமிழ் சினிமா

வெற்றிமாறனின் ‘அரசன்’ ப்ரோமோ எப்படி? - மாஸ் சிம்பு, அசத்தல் அனிருத்!

ப்ரியா

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘சிலம்பரசன்’ நடிக்கும் புதிய படம் ‘அரசன்’. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ப்ரோமோ எப்படி? - கோர்ட் வாசலில் கொட்டும் மழையில் இயக்குநர் நெல்சனிடம் தனது கதையை சொல்கிறார் சிலம்பரசன். கோர்ட் உள்ளே சென்று ஆஜராகும் சிம்புவிடம் மூன்று கொலைகளை செய்தது நீங்கள்தானா என்று கேட்கும் நீதிபதியில் தான் அதை செய்யவில்லை என்று மறுக்கிறார். ஆனால் ஃப்ளாஷ் பேக்கில் இளமையான தோற்றத்துடன் முகத்தில் ரத்தம் வழிய கையில் பட்டாக்கத்தியுடன் நடந்து வருகிறார் சிம்பு.

பின்னணியில் மாஸ் ஆக ஒலிக்கிறது அனிருத்தின் பின்னணி இசை. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்படுவது தற்போதைய ட்ரெண்ட் ஆக இருந்து வருகிறது. அந்த வகையில் ‘வடசென்னை’ உலகத்தில் இருந்து உருவாகும் இந்த படத்துக்கு ஏற்ற கச்சிதமான ஒரு ப்ரோமோவை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன். ‘அரசன்’ ப்ரோமோ வீடியோ:

SCROLL FOR NEXT