தமிழ் சினிமா

“கோர காட்சிகள் கதிகலங்க வைக்கின்றன” - ஜி.வி.பிரகாஷ் வேதனை

ப்ரியா

சென்னை: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த உயிரிழப்புகள் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT