தமிழ் சினிமா

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு கவுரவம்!

செய்திப்பிரிவு

பிரபல இசையமைப்பாளர் தேவா சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “செப். 24-ம் தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் என்னை வரவேற்றனர். அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது. அந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் சொந்தம்.

இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். இதற்காக லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT