தமிழ் சினிமா

இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு ‘குறள் இசையோன்’ பட்டம்!

செய்திப்பிரிவு

பிரபல இசை அமைப்பாளர் பரத்வாஜ், காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ரோஜாக்கூட்டம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் திருக்குறள் முழுவதையும் 1330 பாடகர்களைப் பாட வைத்து, இசை வடிவில் உருவாக்கினார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு கனடா நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில், டொரான்டோ தமிழ்ச் சங்கம் பாராட்டு விழா நடத்தியது. அப்போது அவருக்கு ‘குறள் இசையோன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவருடைய திருக்குறள் சேவையை பாராட்டி கனடா அரசும் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.

“12 வருட உழைப்பில் உருவாக்கிய திருக்குறள் இசை ஆல்பத்துக்கு டொரன்டோ தமிழ் சங்கம் விழா எடுத்து, கவுரவித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் பரத்வாஜ்.

SCROLL FOR NEXT