தமிழ் சினிமா

ரைட் படத்தில் சமூக அக்கறை விஷயம்! - நட்டி தகவல்

செய்திப்பிரிவு

நட்டி, அருண் பாண்டியன் இணைந்து, முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘ரைட்’. ‘பிக் பாஸ்’ அக்‌ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினா பார்கவி, இதில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். நடிகை அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் அறிமுகமாகிறார்.

சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கியுள்ளார். ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில், திருமால் லட்சுமணன், டி ஷியாமளா தயாரித்துள்ளனர். செப்.26-ல் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அதில் நட்டி என்ற நட்ராஜ் கூறும்போது, “ இது ஒரு சுவாரஸ்யமான படம். இதன் இயக்குநர் ரமேஷ் என்னிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர். அவர் கதை சொன்ன போதே யார் யாரெல்லாம் நடிக்க வேண்டும் என எழுதியே வைத்திருந்தார். அருண் பாண்டியன் சார், ஒரு கோ டைரக்டர் போல இதில் வேலை செய்தார். சமூக அக்கறை மிக்க ஒரு விஷயத்தை இயக்குநர் சொல்லியுள்ளார்” என்றார்.

இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் கூறும்போது, “எளிய மக்களுக்கு பிரச்சினை என்றால் போலீஸ் ஸ்டேஷனில் உதவி கேட்பார்கள். அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கே பிரச்சினை என்றால் என்னவாகும்? என்பது தான் இப்படத்தின் மையம்” என்றார்.

SCROLL FOR NEXT